Thursday, February 27, 2014

கண்ணாடிப் பயிற்சி

ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த தவமுறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை
இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில்,பல்வேறு தரப்பட்ட மக்களால், பல்வேறு வடிவங்களில்பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, வருகிறது.
கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச் சிறந்த தவமுறை. கண்ணாடிப்பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவருக்குகீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,
1.ஆன்மா விழித்துக் கொள்கிறது
2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கும்தன்மையைப் பெறுகிறது
3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான திறவுகோலைப்பெறுகிறது

மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான ஒரு பாலமாககண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது. கண்ணாடிப் பயிற்சிமுறையை சுருக்கமாக ஞானத்திற்கான திறவுகோல் என்றுசொல்லலாம்.சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளிசூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது. இதனை இன்னும்சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம். சூக்கும உடல்விழிப்புற்று, கரண உடல் ஜோதி மயமாகிறது

கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள்அனைத்தும் மூடப்பட்ட நிலையில் , அதனை திறக்கும்திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டுவருகிறது என்ற என்ற உண்மை பல பேருக்கு தெரிவதில்லைகண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும்அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்

கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டியவழிமுறைகள்
1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி ஒன்றேகால் அடி அகலம் இரண்டே கால் அடி உயரம் இருக்க வேண்டும்
2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமரவேண்டும்
3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்
4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறுயாரும் பயன்படுத்தக் கூடாது மறைவாக ஒரு துணியால் மூடிமறைத்து வைத்து விட வேண்டும்
5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல்கட்டு திக்கு கட்டு போன்ற கட்டு மந்திரங்களைச் சொல்லி விட்டுகண்ணாடிப் பயிற்சி செய்யலாம்
6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரைசெய்யலாம் அதிகாலை 03.00 முதல் 05.00 வரை செய்வது உத்தமம்

கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதநிலைகளில் செய்யப்பட்டு வருகிறது அதில் ஒரு சில கண்ணாடிப்பயிற்சி முறைகளைப் பார்ப்போம்
கண்ணாடிப் பயிற்சி முறை 1
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்யவேண்டும்
2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்
கண்ணாடிப் பயிற்சி முறை 2
1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்
3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்
கண்ணாடிப் பயிற்சி முறை 3
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்யவேண்டும்
2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்
3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்
இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்திவந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்கு கிடைக்கும்.

கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்

கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும் இதுகண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர அதுவே முழுபலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்துஎதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரியவசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்
கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்துசெய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும் ஜக வசியம் முகவசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெறவேண்டுமானால் சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒருமந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்துகண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும்வசியமாகும்
இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் சர்வ சித்திதனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம்
கண்ணாடி என்பது யந்திரம்
தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப்பயிற்சியின் சூட்சும வி‘யம் நமக்குத் தெரிந்து விடும்

கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ

கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும் செய்துவந்தால் பலன் தெரியும்
நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அதுதெளிவாகவும் முகம் முழுவதும் தெரியும் படியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன் எடுத்துக்கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை சிறிது நேரம் பார்த்துவிட்டு வைத்து விட வேண்டும்
தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும் இந்த போட்டோவைவேறு யாரும் பார்க்காதவாறு மறைவாக வைத்திருக்க வேண்டும்எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்தசெயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லி விட்டு போட்டோவைவைத்து விட வேண்டும் இதே முறையில் தொடர்ந்து செய்து வர நாம்எண்ணிய காரியம் நிறைவேறும் எண்ணிய காரியம் முடிந்தவுடன்அடுத்து நடக்க வேண்டிய செயலை நினைத்துக் கொண்டுபோட்டோவைப் பார்க்க வேண்டும்

கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள்எல்லாம் குறைவே. கண்ணாடிப் பயிற்சி எளிதில் யாரும் அறிந்துகொள்ள முடியாத கணக்கிலடங்காத அரிய பொக்கிசங்களைதன்னுள் அடக்கி வைத்திருக்கிறது அதன் திறவுகோல் மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது திறவுகோலை கண்டுபிடியுங்கள் அரியபொக்கிசங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
- Neerkondar.

Thursday, February 20, 2014

கருநெல்லி சாறு

அகத்தியர் அருளிய கருநெல்லி கற்பம் பற்றி பார்ப்போம்.
காணவே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
கருநெல்லிப் பழமைந்தின் சாருவாங்கி
பேணவே அதுக்குநிகர் தேனுங்கூட்டி
பிரியமுடன் அந்திசந்தி மண்டலங்கொள்ளு
பூணவே வாசியது பொருந்திநின்று
பூரணமாய்த் தேகமது சித்தியாகும்
ஊணவே தேகமது சித்தியானால்
ஒருதீங்கு மில்லையடா சோதியாச்சே.
- அகத்தியர்.
ஐந்து கருநெல்லிப் பழங்களில் இருந்து சாறு எடுத்து, அதன் எடைக்கு சம அளவில் சுத்தமான தேன் கலந்து உண்ண வேண்டுமாம். இப்படி தினமும் இரு தடவை அந்தி சந்தி வேளைகளில் உண்ண வேண்டுமாம். அதாவது ஒரு நாளைக்கு காலையில் ஐந்து பழம், மாலையில் ஐந்து பழமென இரண்டு தடவை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட கூறுகிறார்.
இப்படி ஒரு மண்டலம், அதாவது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டுமாம். ஒரு நாளைக்கு பத்துக் கரு நெல்லி பழங்கள் வீதம், நாற்பத்தி எட்டு நாட்களுக்கும் நானூற்றி எண்பது பழங்கள் தேவைப்படும். எனவே இந்த பழங்கள் கிடைக்கும் காலத்தில் இந்த கற்பத்தினை முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு ஒருமண்டல காலம் தொடர்ந்து உண்டால், சுவாசம் சீரடைந்து தேக சித்தியும் கிட்டுமாம். தேக சித்தி கிடைத்த பின் உடலுக்கு எந்த தீங்கும் உண்டாகாது என்றும் சொல்கிறார். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
வாய்ப்புள்ளவர்கள் இந்த எளிய கற்பத்தினை முயற்சிக்கலாமே!

Sunday, February 2, 2014

நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கும் - பிராண முத்திரை பயிற்சி

மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் பிராண சக்திக்கும் இடையிலான தொடர்பு குறித்து நமது தந்திர யோகிகள் அறிந்திருந்தனர். மூளையின் இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன் ) மட்டுமின்றி, பிராண சக்தி எனப்படும் பிராணனும் தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.

இந்த பிராண சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்து, மூளையின் செயல்திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும்.

செய்முறை: சிறுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும், அதிக அழுத்தம் வேண்டாம் சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும், பிற இரு விரல்களும் (சுட்டுவிரல், நடுவிரல்) வளைவின்றி நேராக இருக்கட்டும்.

அமரும் முறை: ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம், மற்றவர்கள் கால்களை மடக்கி அமர்ந்து செய்யவும், மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த முத்திரையைச் செய்யலாம், தலை, கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரு கைகளிலும், ஒரே நேரத்தில் செய்யவும், சுவாசம் இயல்பான நடையில் இருக்கட்டும். சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம், மூச்சை அடக்குதல் கூடாது.

குறைந்த பட்சம் 8 நிமிடங்கள், அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம். சராசரியாக பள்ளி மாணவர்கள் காலையில் 16 நிமிடங்கள், மாலையில் 16 நிமிடங்கள் செய்யப் பழகிக்கொள்வது நல்லது.

பலன்கள்: மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது. மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும். உடலிலுள்ள அனைத்து செயல்களுக்குமே பிராண சக்தி அதிக அளவில் பாய்வதால் உடலில் உள்ள அசதி, சோர்வு, சோம்பேறித்தனம் ஆகியவை மறைந்து, உடலிலும் ஒரு புத்துணர்வு உருவாகும். உடல் , மூளை இரண்டின் செயல்திறணும் பல மடங்கு அதிகரிக்கும். உடலில் பிராண சக்தி அதிக அளவில் பாயும்போது, நாடிகளில் உள்ள சக்தித் தடைகள் அதிகரிக்கும். இவை தவிர பிராண வாயுவுக்கு வேறு ஒரு மிக முக்கியமான பணியும் உண்டு.

ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் மூளையின் செயல்கள் சுறுசுறுப்படைந்தாலும் இடது மூளையின் செயல்பாடுகளே அதிகரிக்கும். பிராண சக்தி அதிக அளவில் செல்லும்போதுதான் வலது மூளையின் பணிகளான, பேச்சுத்திறன், எழுத்துத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் அதிகரிக்கும்.நினைவாற்றலை அதிகரிக்கும்.

இவண் உங்கள் உறவன் சீ.பாசகர்........

முத்திரை..!

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....
1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.
2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.
3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.
5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.
6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.
7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.
.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.
10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.
11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.
இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.