Tuesday, September 10, 2013

தென்னை மரம் (cocosnucifera)

Photo: தென்னை மரம் (cocosnucifera)

மேம மகக் கொதிப்பு வீறு மிரத்தபித்தம்
வேக வசிர்க்கர நோய் வீழ்பிரம் - தேகத்தில்
வின்னம்பா லிக்கும் விசதாகம் போவென்றாற்
றென்னம்பா ளைப்பூவைத தின்.

- தேரையர்.

தென்னம் பூவின் மேலுள்ள பாளையை நீக்கி உள்ளிருக்கும் பூவைப் பூண் இல்லாத உலக்கையால் நன்றாய் இடித்துப் பிழிந்து எடுத்த சாற்றை அருந்தப் பெரும்பாடு, வெள்ளை போகும்.

இதன் சாற்றுடன் இதரக் கடைச் சரக்குகளைச் சேர்த்து லேகியமாக அருந்தப் பெரும்பாடு, வெள்ளை, வெட்டையை போக்கும் மருந்தாகிறது. இளநீர் கோடையில் சிறந்த பானமாகவும், இதில் செவ்விளநீர் தைல பாகத்தில் பயனாகிறது.

தேங்காய்ச் சிரட்டையிலிருந்து இறக்கிய குழித் தைலம் படர்தாமரை, அரக்கடுவன், தேமல் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இதைக் கருஞ்சீரகத்தைச் சேர்த்துத் தலை முழுகி வரச் சரும நோய்கள் போம். இளங்குருத்து இரத்த மூலத்தை நிறுத்தும்.

-----------------------------------------------------
https://www.facebook.com/Siddhars

https://www.facebook.com/Siththar.Masters

https://www.facebook.com/Thamil.Siththars

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.

No comments:

Post a Comment