Wednesday, November 13, 2013

ஆயுர்வேத சிகிச்சையில் அதிமதுரம்



அதிமதுரம் உலகின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு மூலிகை. வைரஸ் கிருமியை அழிக்கும் ஆற்றல் அதிமதுரத்திற்கு உண!டு என்று விஞ்ஞானிகள் தற்போது கண!டறிந்துள்ளனர். அதிமதுரத்தில் உள்ள பசைப்பொருளும், பிசின் பொருளும் உணவு மண!டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது.

கிளைசிரிக் அமிலம் (புடலஉலசசாணைiஉ யுஉனை) அதிமதுர வேர்களில் அதிகம் காணப்படுகிறது. இதுவே அதிமதுரம் காசம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கக்கூடிய மருத்துவ பண!பிற்கு காரணம்.

ஆயுர்வேத சிகிச்சையில் அதிமதுரம் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், உணவு மண!டலம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

சாதாரணமான இருமல், வறட்டு இருமல், தொண!டை கட்டு, தொண!டை கமறல், தொண!டை புண!, மார்பு சளி போன்றவற்றிற்கு அதிமதுரம் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.
சீன மருத்துவமுறையில் அதிமதுரத்தை கல்லீரல், மண!ணீரல், சிறுநீரக நோய்களுக்கு உபயோகப்படுத்துகின்றனர். ஜப்பான் தேசத்தில் வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்தாக இதனை உபயோகிக்கின்றனர்.

இருமல் தணிய அதிமதுரம் :

நன்றாக சுத்தம் செய்த அதிமதுர வேரை முதலில் இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண!டும். 50 கிராம் அதிமதுரப் பொடியுடன் 10 கிராம் மிளகுத்தூள் சேர்க்க வேண!டும். இதை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் தணியும்.

தொண!டை கரகரப்புக்கு அதிமதுரம் :

அதிமதுர வேர் துண!டினை அப்படியே வாயில் வைத்து சுவைக்க தொண!டை கட்டு, தொண!டை கரகரப்பு குறையும்.

அதிமதுர சூரணம் :

அதிமதுரம் - 50 கிராம், சோம்பு - 50 கிராம், நாட்டு சர்க்கரை - 50 கிராம், கொடிவேலி வேர்ப்பட்டை - 25 கிராம் எடுத்து சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து இடித்து, சலித்து வைத்துக் கொள்ள வேண!டும். இதுவே அதிமதுர சூரணம் செய்யும் முறை.

இச்சூரணத்தை தினமும் 5-10 கிராம் அளவு எடுத்து வெந்நீரிலோ அல்லது தேனிலோ குழைத்து உட்கொள்ள வேண!டும். இவ்வாறு உட்கொள்வதால் கபம் சம்பந்தமான நோய்கள் அணுகாது. இதுவே நோய் வருமுன் காக்கும் உபாயமாகும். மேலும், நோய் வந்த பின்னரும் இச்சூரணத்தை உட்கொள்ளலாம். தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி, காய்ச்சல், இருமல், சளி, இளுப்பு போன்ற நோய்கள் குணமடையவும் இச்சூரணத்தை உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment