Monday, November 18, 2013

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள்..!


1 - மணத்தக்காளி கீரை
இக் கீரை அதிக மருத்துவ குணம் கொண்டது.மணத்தக்காளிக்குத் தனியாக விதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கடைகளில் கிடைக்கும் மணத்தக்காளி வற்றலில் இருந்து விதைகளை உதிர்த்து எடுக்கலாம். கீரையில் இருக்கும் பழங்களை
தண்ணீரில் பிசைந்து விதைகளை பிரித்தெடுத்து காய வைத்தும் சேகரிக்கலாம்.
நன்றாக வெயில் படும் இடத்தில் இக்கீரையை வளர்க்க வேண்டும். இதை வளர்க்க செம்மண்ணும், மணலும் கலந்து, கொஞ்சம் சாண உரமும் கலந்து மண் தொட்டிகளிலோ, தகர டப்பாக்களிலோ, பிளாஸ்டிக் வாளிகளிலோ விதைகளை தூவி வளர்க்கலாம். வளர்ந்ததும் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
மருத்துவகுணம்:
இக்கீரையானது வாய்ப்புண்ணுக்கும், வயிற்றுப்புண்ணுக்கும் சிறந்த மருந்தாகும். மேலும் சளி, ஆஸ்துமா போன்ற தொல்லைகளையும் நீக்கும். அதனால் வாரத்தில் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதன் பழங்களை அப்படியேயும் சாப்பிடலாம். மிகவும் நல்லது.
நல்லவை உண்டு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் !

No comments:

Post a Comment