Friday, October 25, 2013

மகராசனம்!

விரிப்பில் குப்புறப் படுத்து முகவாய் தரையைத் தொட உள்ளங்கால்கள் மேல் நோக்கியிருக்கட்டும். கைகள் முன்னோக்கி நீட்டியிருக்கவும். கால் விரல்கள் வெளிப்புறம் நோக்க,குதிகால்கள் இரண்டும் ஒன்றை ஓன்று பார்க்க கால்களைச் சிறிது அகட்டி வைக்கவும்.
வலது பக்க உள்ளங்கையால் இடது தோளையும் இடது பக்க உள்ளங்கையால் வலது தோளையும் பற்றவும்.முன்கைகள் சேருமிடத்தில் முகவாயை வைக்கவும். சாதாரணமாக மூச்சுவிட்டு இந்நிலையில் சுமார் 2 நிமிடம் இருந்த பின்னர் ஆரம்ப நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்:
1.தூக்கமின்மையைப் போக்குகிறது.
2.உடல்முழுவதும் நல்ல ஓய்வினைக் கொடுக்கிறது.
3.முதுகு தண்டுவடத்தில் கோளாறு நீங்குகிறது.
4.மன இறுக்கத்தை போக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது.

No comments:

Post a Comment